மயிலாடுதுறை, ஜூலை 19 - மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் குத்தாலம் ஒன்றிய பேரவைக் கூட்டம் ஒன்றியத் தலைவர் பி.லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பேபி, துணைத் தலை வர் பொ.சகிலாபானு ஆகியோர் உரையாற்றி னர். வேலையறிக்கையை ஒன்றியச் செயலா ளர் சுமதி வாசித்தார். பேரவையை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் சி.லதா, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கலைச்செல்வன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செய லாளர் ப.மாரியப்பன் நிறைவுரையாற்றினர்.
பேரவையில் புதிய தலைவராக லெட்சுமி, செயலாளராக நீலா, பொருளாள ராக சரண்யா உள்ளிட்ட 39 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய செயலாளர் நீலா நன்றி கூறினார்.